எட்டரைக்குப் புறப்பட்டு காரில் ஏறி ,
சுசிந்தரம் அடைந்தோம் நண்பகலில் ;
கூட்டமொ கூட்டம் ; கூழாகியது ஆடைகள் ,
கும்மாளமிட்டு நெருக்கியது , கும்பலே , மஹாதேவா
தனுமலையா னை அடைந்து , தன்னாலே முன்னேறி ,
சன்னிதி பார்த்து, சடுதியில் பிரகாரம் வந்தோம் ;
நெடு துயர்ந்த ஹனுமான் நெற்றி முதல்
நீண்ட பாதம் வரை நீரும் , பாலும் , தேனும்
அபிஷேகம் கண்டோம் , களிப்பு எய்து ,
ஹரே ராம ,ஹரே ராம என்று கூ ட்டம் தள்ளி ,
அப்புறமாய் வெளி விட்டது எங்களையே !
இரண்டு மணிக்கே எங்கள் காரில் ஏறி வந்தோம் , வள்ளியூர் ,
நல்ல சாப்பாட்டு விடுதி கண்டு , மதிய உணவு உண்டு ,
திரும்பினோம் , பத்தமடை வைத்திய சாலைக்கே .
No comments:
Post a Comment